பா.ஜ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமாவளவனை அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர்கள் மைதீன்பாவா, திருசித்தன், மாவட்ட பொருளாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கருத்தரங்கு கூட்டம் சின்னாளப்பட்டியில் கடந்த 1-ந்தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியுள்ளார். மேலும் சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story