பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்


பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், அழகேசன், செந்தில்முருகன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் குமாரராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அனைத்து நிர்வாகிகளும் பிரதமர் மோடியின் சாதனை குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஹரிஹரன், ராஜா, அந்தோணிசாமி, அருளப்பன், ஜான்ஜெயசீலன், தீபா, பிரேமா, ஜாக்குலின், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.


Next Story