பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்


பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
x

பெரியகுளத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தேனி

பாரதீய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரியகுளத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் சிவக்குமார், மண்டல தலைவர் முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதேபோல் கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.


Next Story