பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்


பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
x

பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்

திருவாரூர்

திருவாரூர் பா.ஜ.க. சாா்பில் நிர்வாகிகள் கூட்டம் விளமலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி பேசுகையில், வருகிற 30-ந்தேதி நடக்க உள்ள பிரதமரின் 100-வது மன்கி பாத் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும். பிரதமரின் திட்டங்களையும் மக்களிடம் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொள்கிறார். இதுவரை நியமிக்கப்படாத பூத் கமிட்டிகள் மற்றும் கிளை தலைவர்களை அடுத்த கூட்டம் நடப்பதற்குள் நியமிக்க வேண்டும் என்றார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அட்சயா முருகேசன் நன்றி கூறினார்.


Next Story