பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்கு
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
மின் கட்டண உயர்வை கண்டித்து கரூர் கோவை ரோட்டில் நேற்று முன்தினம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோவை ரோட்டில் சட்ட விரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story