பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் அனுமதியின்றி பா.ஜனதா கொடிக்கம்பம் நடப்பட்டு, பா.ஜ.க. கொடி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து உறையூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் சம்பவ இடத்திற்கு சென்று கொடிக்கம்பத்தை அகற்றினார். மேலும் இது குறித்து பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர், உறையூர் மண்டல் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story