பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு


பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
x

நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சி கதிர்நாயக்கன்பட்டி பிரிவில் ரூ.60 லட்சம் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிட பணி நடப்பதாக கூறி பா.ஜ.க. சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் கட்டிட பணி நடைபெறும் இடத்துக்கு சென்று பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்டிட பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சஞ்சீவ்குமார், பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பா.ஜ.க. நிர்வாகிகள் கண்ணன், அய்யனவேலு, நாகபாண்டி, கடாலீஸ்வரன், ரகு, முத்துசாமி, முனியப்பராமன் ஆகியோா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story