தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
x

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கடலூர் கிழக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார். கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொள்கின்றனர்.

காயத்ரி ரகுராம்

புதுக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா, அரியலூரில் தடா பெரியசாமி, செங்கல்பட்டில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், அயலக மற்றும் பிற மாநில தமிழ் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், திருவள்ளூர் மேற்கில் மாநில துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி, தலைமை நிலைய பொறுப்பாளர் ஜே.லோகநாதன் பங்கேற்கிறார்கள்.

கராத்தே ஆர்.தியாகராஜன்

ராணிப்பேட்டையில் மாநில பொதுச்செயலாளர் பி.கார்த்தியாயினி, தென்சென்னையில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், சென்னை கிழக்கில் மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், மத்திய சென்னை கிழக்கில் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, டாக்டர் ஆர்.ஆனந்த பிரியா, மத்திய சென்னை மேற்கில் மாநில செயலாளர்கள் கராத்தே ஆர். தியாகராஜன், பிரமிளா சம்பத்,

சென்னை மேற்கில் மாநில துணை தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், வடசென்னை கிழக்கில் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் காயத்ரி தேவி, வட சென்னை மேற்கில் மாநில துணை தலைவர் பி.டால்பின் ஸ்ரீதர், சேலம் கிழக்கில் முன்னாள் எம்.பி. எஸ்.கே.கார்வேந்தன், சேலம் மேற்கில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சிவப்பிரகாசம்,

வானதி சீனிவாசன்

கரூரில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்துகொள்கின்றனர். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.


Next Story