கோவில்பட்டியில் பா.ஜனதா கவுன்சிலர் நூதன போராட்டம்


கோவில்பட்டியில் பா.ஜனதா கவுன்சிலர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜனதா கவுன்சிலர் நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை 20-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் விஜயகுமார். இவர் பா.ஜனதா தொழிற் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். தன்னுடைய வார்டில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். சுகாதாரமற்ற முறை நிலையில் உள்ள கிணற்றை தூர்வாரி பராமரிக்க வேண்டும். வார்டு பகுதியில் சாலை மற்றும் வாறுகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை வளாகம் முன்பு தன்னுடைய தாடி, மீசையை எடுத்து நூதன போராட்டம் நடத்தினார்.

அவருடன் பா.ஜனதா நகர தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து விஜயகுமார் கூறுகையில், "எனது வார்டில் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்தும் எங்கள் வார்டு பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் வார்டு மக்களுடன் வந்து போராட்டம் நடத்துவேன்" என்றார்.


Next Story