பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
கடவூர் ஒன்றியம், காணியாளம்பட்டியில் செயல்படும் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளின் நலனுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடவூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் நவீன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் கைலாசம் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story