பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர், மின்சாரம் தாக்கி பலி


பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி   செயலாளர், மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர், மின்சாரம் தாக்கி பலி

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை மதகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). இவரது மனைவி சபிதா (39). பா.ஜ.க. சிவகங்கை மாவட்ட மகளிர் அணி செயலாளர். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார். ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான வயலில் விவசாய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று மாலை மின்மோட்டாரை இயக்க சபிதா சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து எஸ்.வி மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அனுமதி இல்லாமல் மின் வேலி அமைக்க முற்பட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக்கூறி ராமகிருஷ்ணன் மீது மின்வாரியம் சார்பில் எஸ்.வி.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

------------


Related Tags :
Next Story