பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மரவாநத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் பைரவர் பாபு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் அன்பழகன், கணேசன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் அருள், செயலாளர் ஆர்.எம்.ஹரி, மாநில ஓ.பி.சி.அணி செயலாளர் வக்கில் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி செயல்பாடுகள், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்கள். பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட கொடிகம்பத்தில் பா.ஜ.க. கொடியேற்றினார்கள். கூட்டத்தில் பொருளாளர் சம்பத், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சதீஷ்சந்தர் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story