பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசில் தேங்காய் வழங்கக்கோரி பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கக்கோரியும், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியை நிறுத்தக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள்
கலிவரதன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினர்.
இதில் விவசாய அணி மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியன், குட்டியாண்டி, நகர தலைவர் வடிவேல்பழனி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சம்பத், தெய்வராமச்சந்திரன், குணசேகரன், சுந்தர், மாவட்ட நிர்வாகிகள் சுகுமார், சிவதியாகராஜன், எத்திராஜ், ஆனந்தன், கலையரசி, மோகன், தனசேகர், குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் பலருக்கு பா.ஜ.க.வினர் தேங்காய் கொடுத்தனர்.