பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்


பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
x
திருப்பூர்


அவினாசி புதிய பஸ் நிலையம் எதிரில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசின் போக்கை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்ட துணைத்தலைவர் கார்வேந்தன், பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், சீனிவாசன், தங்கராசு, அவினாசி நகர தலைவர் தினேஸ்குமார், வட்டார ஒன்றிய தலைவர் கணேசன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story