பா.ஜ.க. கொடியேற்று விழா
பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய ஊர்களான விஸ்வநாதபேரி, சிவகிரி பேரூராட்சி இனாம் கோவில்பட்டி, தேவிபட்டினம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார்.
வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் அ.ஆனந்தன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் அர்ச்சுனன், பொது செயலாளர் பால குருநாதன், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன், இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓ.பி.சி. அணி துணை தலைவர் தங்கம், சிவகிரி நகர தலைவர் ஒரு சொல் வாசகன், பிரசார பிரிவு செயலாளர் ராமசாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கொண்டனர்.
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைவர் முருகன் வரவேற்றார். அம்மன் கோவில் திடலில் 54 பொங்கல் பானை வைத்து பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 25 பேருக்கு சீருடைகளும், 20 பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிதாக சேமிப்பு புத்தகங்களும் வழங்கப்பட்டது. கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரகுமார், மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.