பா.ஜ.க. கொடியேற்று விழா
முத்தையாபுரத்தில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடந்தது.
ஸ்பிக்நகர்:
தெற்கு மண்டல பா.ஜ.க. சார்பில் கட்சி தொடக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு மாணிக்க விநாயகர் தெரு மற்றும் பேரின்ப நகர் ஆகிய இடங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராம், ஆன்மிக பிரிவு தலைவர் சேகர், மகளிர் அணி மண்டல தலைவி செல்வி, பொருளாதார பிரிவு மண்டல தலைவர் முருகேசன், தொழில் பிரிவு மண்டல தலைவர் சங்கர் கணேஷ், தெற்கு மண்டல செயலாளர் செல்வம், மகளிர் அணி லட்சுமி சிலம்பொழி, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு பொறுப்பாளர் முத்து, கிளை தலைவர்கள் சண்முகநாதன், உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.