பா.ஜ.க. பொதுக்கூட்டம்


பா.ஜ.க. பொதுக்கூட்டம்
x

திருச்சுழியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக திருச்சுழி சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருச்சுழியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் விருதுநகர் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு பேசுகையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியை வெற்றிபெற அயராது உழைப்போம் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story