3-வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமையும்- மத்திய மந்திரி வி.கே.சிங் பேச்சு


3-வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமையும்- மத்திய மந்திரி வி.கே.சிங் பேச்சு
x

3-வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமையும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,

3-வது முறையாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமையும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

மாநில மாநாடு

மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் பா.ஜனதா முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில மாநாடு மாநிலத்தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மாணிக்கம் நடராஜன், மாநிலச்செயலாளர் ஆனந்த ஜெயம் ஆகியோர் வரவேற்றனர். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மேற்கு மாவட்ட ராணுவ வீரர் பிரிவு தலைவர் ஆண்டி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் மத்திய விமானப்படை இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 50 தையல் எந்திரங்கள், 200 பேருக்கு சேலைகள், 50 மாணவ- மாணவியருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள காசோலைகளை வழங்கினார்.

பின்னர் வி.கே.சிங் பேசியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்

இந்தியாவை நேசிக்கும் ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ராணுவ வீரர்கள் பிரிவு என தொடங்கப்பட்ட ஒரே தேசிய கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது. ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் பா.ஜனதாவில் இணைந்து செயல்பட வேண்டும். பா..ஜனதா அரசின் நலத்திட்ட உதவிகள் இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை. 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story