பா.ஜ.க. வளர்வது தமிழகத்திற்கு நல்லதல்ல; தொல்.திருமாவளவன் பேட்டி


பா.ஜ.க. வளர்வது தமிழகத்திற்கு நல்லதல்ல; தொல்.திருமாவளவன் பேட்டி
x

பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததில் இருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் ஒரு பொறுப்பு கவர்னர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது. அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு காவடி தூக்குவது அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.

ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது. பீகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.


Next Story