பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை பா.ஜ.க. எடுக்கும்


பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை பா.ஜ.க. எடுக்கும்
x

பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை பா.ஜ.க. எடுக்கும் நிர்வாகி கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாதார அணி ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்துராமலிங்கம், விருதுநகர் மாவட்ட தலைவர் சுந்தரபாஸ், துணைத்தலைவர் செல்வராஜ், செல்லப்பாண்டி, சிவகாசி நகர தலைவர் ரகுநாத் கோவிந்தன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எம்.எஸ்.ஷா நிருபர்களிடம் கூறிய தாவது:-

பா.ஜ.க. மிகவும் ஒழுக்கமான கட்சி. இங்கு தவறு செய்பவர்களுக்கு இடம் இல்லை. மாநில தலைவர் அண்ணாமலை தவறு செய்பவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தொழில்கள் வளர்ச்சி அடைய வில்லை. தொழில் நகரங்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. ஆனால் இனி வரும் காலங்களில் தொழில்நகரங்கள் மீது பா.ஜ.க. தனி கவனம் செலுத்தும். சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை பா.ஜ.க. எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story