மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் கைது
கடலூர்
திட்டக்குடி
திட்டக்குடியை அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விஜயராஜிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஆலம்பாடியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகா் பொன்.பெரியசாமி, சிதம்பரத்தை அடுத்த நடராஜபுரத்தை சேர்ந்த தீபக் மற்றும் இடைச்செருவாயை சேர்ந்த பழனிவேல் ஆகியோர் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து ராஜேந்திரன் மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாகி விட்ட தீபக், பழனிவேல், பொன்.பெரியசாமி ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் நேற்று ஆலம்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்த பொன்.பெரியசாமியை போலீசாா் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள தீபக், பழனிவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story