சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு பதிவு


சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு பதிவு
x

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே பா.ஜ.க நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே பா.ஜ.க நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் அவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜ.க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story