பா.ஜனதா பட்டியல் அணி பிச்சை அளிக்கும் போராட்டம்
கிருஷ்ணகிரி- தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா பட்டியல் அணி பிச்சை அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
பட்டியல் அணி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய நல திட்ட நிதியை, பட்டியல் இன மக்களுக்கு சேர்க்காமல் முறையாக பயன்படுத்தாததாக தி.மு.க. அரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். நகர தலைவர் கவுன்சிலர் சங்கர் வரவேற்றார். மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கவியரசு, பொதுச் செயலாளர் சங்கர், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நேற்று பிச்சை அளிக்கும் போராட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் சாட்சாதிபதி கண்டன உரையாற்றினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் திம்மராஜ், பார்வையாளர் ஆனந்த், தேன்கனிக்கோட்டை நகர தலைவர் வெங்கட், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், குருமூர்த்தி, ராஜசேகர்,
பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர்கள் வண்ணப்பன், விஜயா, பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மாரப்பன், மாவட்ட துணைத்தலைவர்கள் சீனிவாச ரெட்டி, நாகராஜ், முருகன், இந்திராணி, எஸ்.டி. அணி மாநில செயலாளர் பாப்பண்ணா, மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் நாகேஷ், ஒன்றிய தலைவர்கள் சிவா, கிருஷ்ணமூர்த்தி, சந்துரு, ஹரிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.