பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருகிற 23-ந்தேதி கரூர் மாவட்டம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நடத்தும் `என் மண் என் மக்கள்' என்ற மாநிலம் தழுவிய நடை பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதை கரூர் மாவட்டம் சார்பில் சிறப்பாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story