பா.ஜனதா கூட்டம்


பா.ஜனதா கூட்டம்
x

பா.ஜனதா கூட்டம் நடந்தது

தென்காசி

வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நகரம் செந்தூர் மஹாலில் நடந்தது. ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராம்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராசா, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மகாலிங்கம், சிவராசா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றத்தை தொடர்ந்து வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

* பா.ஜனதா கட்சி கடையம் கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொட்டல்புதூர், திருமலையப்பபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர்கள் ரத்தினகுமார், செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு வழிகாட்டுதல் மாவட்ட பொதுச்செயலாளர் அருள்செல்வன். மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையத்தை தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* திசையன்விளை நகர பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம், மடத்து அச்சம்பாட்டில் நடந்தது. நகர தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தமிழ் செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 13 பெண்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொதுச்செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.



Next Story