பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 May 2023 12:30 AM IST (Updated: 21 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பைக் கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்தும் பா.ஜனதா சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அதன்படி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன், வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட பொதுச்செயலர் ராஜா சிவமுருகஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story