பா.ஜனதா கட்சியினர் தேசியக்கொடியுடன் நடைபயணம்;பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


பா.ஜனதா கட்சியினர் தேசியக்கொடியுடன் நடைபயணம்;பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x

நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் தேசியக்கொடியுடன் நடை பயணம் மேற்கொண்டனர். இதில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் தேசியக்கொடியுடன் நடை பயணம் மேற்கொண்டனர். இதில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

நடைபயணம்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகர பா.ஜனதா சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு மாநகர கிழக்கு தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநகராட்சி பார்வையாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் ரதவீதி, அரசமூடு சந்திப்பு, மணியடிச்சான்கோவில் சந்திப்பு, மீனாட்சிபுரம் வழியாக கோட்டார் போலீஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்னனும் நடந்து வந்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story