பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள்
பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிற அணிகள் மாநாடு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்கள் ஆர்.எஸ்.வருண்குமார், கே.வீரமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி தலைவர் ஜானகிராமன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பழகன், பிரசார பிரிவு தலைவர் டி.சி.அருள்மொழி, மாவட்ட பொது செயலாளர் சி.கவியரசு, ஈஸ்வர் தண்டாயுதபாணி, நகரத் தலைவர் சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர்கள் கே.மைதிலி, கிஷோர் உள்பட பலர் பேசினார்கள்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. அணி, சிறுபான்மை அணி, வழக்கறிஞர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, உள்ளாட்சி மேம்பாட்டு திட்டம், கல்வியாளர் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச் செயலாளர் டி.வி.பார்த்திபன் நன்றி கூறினார்.