கஞ்சா விற்பனையை தடுக்க கோரி பா.ஜ.க.வினர் மனு


கஞ்சா விற்பனையை தடுக்க கோரி பா.ஜ.க.வினர் மனு
x

கஞ்சா விற்பனையை தடுக்க கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கஞ்சா போன்ற போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்ய இளைஞர்கள், பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில், பா.ஜ.க. புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன் தலைமையிலான பா.ஜ.க. வினர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக விற்கப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது போன்ற கஞ்சா விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story