பா.ஜ.க. கம்பம், கொடி திருட்டு


பா.ஜ.க. கம்பம், கொடி திருட்டு
x

பா.ஜ.க. கம்பம், கொடி திருட்டுபோனது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் பிரிவு சாலை அருகே நடப்பட்டிருந்த பா.ஜ.க. கொடி கம்பமும், குரும்பலூர் சிவன் கோவில் அருகே நடப்பட்டிருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் கட்சி கொடியையும் காணவில்லை. இது தொடர்பாக கட்சியின் பெரம்பலூர் வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்திக் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story