பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு - ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்
பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதான பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. திமுக ஆட்சி அமைப்பதற்க்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் நிறுவனம் தொழில் செய்து வருகிறது. ஜி ஸ்கொயர் மற்றும் அதன் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்கள் தவறான மதிப்புகளோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story