மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story