அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்


அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் மாநில அரசுகளின் செயலை கண்டித்து வேதாரண்யம் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. நாகை மாவட்ட பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமை தாங்கினார்.

அம்பேத்கர் சிலையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. இந்த நிதியை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் பட்டியல் இன மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த திராவிட கட்சிகள் மத்திய அரசு ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போராட்டத்தில் நாகை மாவட்ட கல்வியாளர் பிரிவு கார்த்திகேயன், பொறுப்பாளர்கள் வைரமுத்து, சுந்தரமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு மனுவின் நகலை வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் அளித்தனர்.


Related Tags :
Next Story