மேலூரில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


மேலூரில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x

மேலூர் நகரில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுந்தர்ப்பான் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர். சிலர் கட்டிடங்கள் கட்டியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை

மேலூர்,

மேலூர் நகரில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுந்தர்ப்பான் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர். சிலர் கட்டிடங்கள் கட்டியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை தாங்கினார். இதில் ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், நகர தலைவர் சேவுகமூர்த்தி மற்றும் தசரதன், ராஜகோபால், தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story