ஊட்டியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
ஊட்டி
தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சாய் சிங் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்கள். இதில் ஏ.டி.சி பகுதியில் விவசாயிகள், பொது மக்களுக்கு தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story