ராமநாதபுரத்தில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை கழிவுநீரால் மக்கள் அவதி அடைந்து வருவதால் ராமநாதபுரத்தில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து துர்நாற்றம் வீசியதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனை கண்டித்து ராமநாதபுரம் நகர் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேசியதாவது:-

ராமநாதபுரம் நகர் முழுவதும் 33 வார்டிலும் பாதாள சாக்கடை உடைந்து ரோடுகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. இதுகுறித்து பா.ஜ.க சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபற்றி தினமும் ஏராளமான பொதுமக்கள் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் கார்த்திகேயன், மாநில நிர்வாகி நாகேந்திரன், ஒன்றிய நிர்வாகி சண்முகராஜா, மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், கவுன்சிலர் குமார், வீரபாகு, குமரன், வக்கீல்கள் ராஜூ, சவுந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நாகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story