ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

இந்து சமூகம் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி கறம்பக்குடி வட்டார பா.ஜனதா சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் அழகப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆலங்குடி சரக போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி ஆடிட்டர் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் இந்து மதத்தையும், இந்து மத மக்களையும் அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினியிடம் புகார் மனு அளித்தனர்.


Next Story