விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
கிருஷ்ணாபுரம் காலனியில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பா.ஜனதா பி.பி.குளம் மண்டல் சார்பில் கிருஷ்ணாபுரம் காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு 16-வது வார்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஜெனார்தனன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவு, பத்திரப்பதிவு கட்டண உயர்வுகளை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதோடு கிருஷ்ணாபுரம் காலனி 4-வது தெருவில் குடிநீர் வராததை கண்டித்தும், கிருஷ்ணாபுரம் காலனியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் மண்டல் நிர்வாகிகள் இந்துமதி ராம்குமார், சந்திரசேகரன் ஜெயக்குமார், யோகேஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.