போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

களியக்காவிளை:

சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை பற்றி அவதூறாக பதிவு செய்யும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்த பின்னரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் மீது மாற்றுக்கட்சியினர் புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என குற்றம்சாட்டியும், இதனை கண்டித்தும் நேற்று களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டு போலீசை கண்டித்து பேசினார். போராட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராஜேஷ் பாபு, மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், மேல்புறம் ஒன்றிய தலைவர் சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் டைசி தங்கையா, மேல்புறம் ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணவாஸ் நாராயணன், முன்சிறை ஒன்றிய தலைவர் விஜில், மாவட்ட மகளிரணி செயலாளர் கிஜி திலகவதி, களியக்காவிளை நகர தலைவர் பத்மகிரீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story