மதுபான உற்பத்தி ஆலையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


மதுபான உற்பத்தி ஆலையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x

மதுபான உற்பத்தி ஆலையை மூடக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தி்ல ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான மதுபான உற்பத்தி ஆலை உள்ளது. இந்த மதுபான ஆலைக்கு நாள்தோறும் சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படுவதாகவும், இதனால் தமிழ்நாடு அரசு வேளாண்மை விதைப்பண்ணைக்கு சொந்தமான சுமார் 600 ஏக்கர் நிலமும், இதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் இப்பகுதி மக்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கந்தர்வகோட்டை ஒன்றிய பா.ஜனதா சார்பில் மதுபான உற்பத்தி ஆலையை மூடக்கோரி ஆலையின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தவமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story