பா.ஜ.க. சக்திகேந்திர ஆய்வு கூட்டம்


பா.ஜ.க. சக்திகேந்திர ஆய்வு கூட்டம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ.க. மாநில துணை தலைவர் நயினார் நகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் தயாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் எம்.கே.டி.ராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தென்மண்டல பொறுப்பாளர் நீலமுரளி யாதவ், மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் ராமராஜ் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடேஷ் மற்றும் வடக்கு அகஸ்தியர்புரம், தெற்கு அகஸ்தியர்புரம், கோட்டைவிளைப்பட்டி, முதலியார்பட்டி உள்ளிட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அம்பையில் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் லட்சுமணராஜா, வேல்முருகன், அம்பை ஒன்றிய தலைவர் சண்முகபிரகாஷ், நகர தலைவர் நடராஜன், பொது செயலர் சுகுமாறன், மாவட்ட துணை தலைவர் மங்கள சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story