பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த சம்பவம்: பாஜக மாநில துணைத்தலைவர் கைது


பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த சம்பவம்: பாஜக மாநில துணைத்தலைவர் கைது
x

பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் பாஜக மாநில துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி பாஜகவினர் கடந்த 11-ம் தேதி ஊர்வலம் நடத்தினர்.

இந்த ஊர்வலம் முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பாரதமாத கோவிலுக்கு செல்ல பாஜகவினர் முற்பட்டனர். பாரதமாதா கோவில் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்குமாறு பாரதமாத கோவில் காப்பாளரிடம் கேட்டனர்.

அப்போது, காப்பாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனால், ஆத்திரமடைந்த ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் பாரதமாத கோவில் நுழைவு வாயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளேன் சென்றனர்.

அங்கு பாரதமாத சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கோஷமிட்டனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த ஒரு பூட்டை நினைவாலய கேட்டில் மாட்டிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், ஆறுமுகம், சிவசக்தி உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாரதமாத கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவத்தில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.


Next Story