பா ஜ க ஆய்வு கூட்டம்


பா ஜ க ஆய்வு கூட்டம்
x

மூங்கில்துறைப்பட்டில் பா ஜ க ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டில் பா.ஜ.க.ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மாநில துணை செயலாளர் துரைவேல், மாவட்ட பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திரமோடி கிராமப்புற பகுதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார். இதில் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்முருகன், ஹரிகிருஷ்ணன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story