பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலைமறியல்
புளியரை அருகே பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலைமறியல் போாராட்டம் நடத்தினர்.
தென்காசி
செங்கோட்டை:
தமிழக எல்லை பகுதியில் புளியரை அருகே உள்ள கோட்டை வாசலில் நேற்று பா.ஜனதா கட்சியினர் திடீரென சாலை மறியலில் நடத்தினர். கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது.
தகவல் அறிந்ததும் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். உரிய அனுமதி பெறாமல் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அரிச்சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story