பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க. எம்.பி. பிரஜ்பூஷன் ஷரண்சிங்கை உடனடியாக கைது செய்யக்கோரியும், போராடும் மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மக்கள் அதிகாரம் மாநிலக்குழு உறுப்பினர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன், மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன், பொருளாளர் சிவராமன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story