திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடைபெற்று வரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும் - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
திமுகவுக்கும் பாஜகவுக்கு நடைபெற்று வரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி ஓசூர் ராம்நகரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக செங்கோலுக்கு பிரதமர் மோடி அங்கீகாரம் கொடுத்தார். திருக்குறளை 23 மொழிகளில் மத்திய அரசு மொழிப்பெயர்த்துள்ளது. விஷசாராயம் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2-வது குற்றவாளி செந்தில் பாலாஜி. ரூ.40,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அரசு அவமானப்பட வேண்டும்.
9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளது. தமிழ்நாட்டில் 1.41 கோடி பேர் மத்திய அரசு மூலம் இலவச வங்கி கடன் பெற்று பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பயனடைவதால் திமுக பாஜகவை குறைகூறி வருகிறது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடைபெற்று வரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.