பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டம்
வள்ளிமலையில் பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கிருஷ்ண சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு அளிக்கப்பட்ட நிதியை சரியான முறையில் பயன்படுத்த இந்த வலியுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் குற்ற செயல்களுக்கு காரணமான போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசை மகளிர் அணி சார்பாக கண்டிப்பது, குடியாத்தம் பகுதியில் கவுண்டன்ய மகாநதி தரைப்பாலம் மற்றும் குடியாத்தம் பழைய புதிய பஸ் நிலையங்களில் கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட தலைவர் மனோகர், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சாந்தி ரேகா உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.