பா.ஜனதா செயற்குழு கூட்டம்
கடையத்தில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர்கள் முருகேசன், முத்துகுமார் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு ராமராஜா, மாநில பொதுக்குழு எம்.ஆர்.கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் கொடியரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆழ்வார்குறிச்சி நகர தலைவர் முத்தையா குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பொட்டல்புதூர் முதல் காவூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதுபோல் ஆழ்வார்குறிச்சி- பாப்பாங்குளம் சாலையையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story