2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி தொடரும்-சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் பேட்டி


2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி தொடரும்-சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் பேட்டி
x

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி தொடரும் என சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பா.ஜனதா அலுவலகத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜரின் உருவப்படத்திற்கு பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பா.ஜனதா அரசியலை ஒரு சேவை அமைப்பாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் ஊழல் தான் பிரதானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும். தி.மு.க. அரசின் அவலத்தை சுட்டிக்காட்டினால் பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 எம்.பி.க்களை பா.ஜனதா அனுப்பும். பொய்யான செய்திகளை பரப்பி பா.ஜனதா சிறுபான்மையினருக்கும், பட்டியிலனத்து மக்களுக்கும் எதிரானவர்கள் என்று கூறி வருகின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் தி.மு.க. அறிவாலயங்கள் வக்பு வாரிய இடங்களில் தான் உள்ளன. விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜனதா தலையிடாது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி தொடரும்'' என்றார்.


Next Story