டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா


டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா
x

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட பா.ஜ.க.வினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் துவாக்குடி டாஸ்மாக் டெப்போவில் இருந்து திருச்சி மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட ஊழியர்கள் டாஸ்மாக் பெட்டி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 2 மாதமாக பணியும் வழங்கவில்லை, ஊதியமும் தரப்படவில்லை. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மேலாளரை சந்தித்து பேசிய போது உடனடியாக பணத்தை தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பணியும் வழங்கவில்லை. இதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், மாவட்ட பொது செயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story